செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By

துலாம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்): முன்கோபம் அதிகம் இருந்தாலும் தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் பிறரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே! 
இந்த மாதம் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும் என்றாலும்  தேவையற்ற வீண் விரயங்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு  சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் உணவு விஷயத்தில் மிகவும் கவனம் செலுத்துவது  நல்லது.
 
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களால் ஒற்றுமைக்குறைவுகள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும், புத்திரர்களால்  மனநிம்மதியற்ற நிலையும் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன்  வாங்க நேரிடும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது உத்தமம்.
 
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், போட்டிகளும் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும்.  வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தமுடியாத சூழ்நிலைகளும் ஏற்படும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டால் அபிவிருத்தி  குறையும் என்பதால் முடிந்தவரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
 
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை சரிவரச்செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள்  தடை தாமதங்களுக்குப்பின் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன்மூலம் வீண் பிரச்சினைகள் உண்டாவதைத்  தவிர்க்க முடியும்.
 
பெண்களூகு உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுபகாரிய முயற்சிகளில்  தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். உற்றார்-உறவினர்களை  அனுசரித்துச்செல்ல வேண்டிவரும்.
 
அரசியல்வாதிகள் பொதுப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்தவரை மக்களுக்கு  கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெறமுடியும்.
 
கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது உத்தமம். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள்  உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு மனஅமைதி குறையும். உடன் இருப்பவர்களாலே வீண்  பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.
 
மாணவர்கள் கல்வியில் ஈடுபாடு குறையும். ஞாபகமறதி, மந்த நிலை உண்டாகும். படிப்பில் கவனம் குறைவதால் எதிர்பார்க்கும்  மதிப்பெண்களைப் பெறமுடியாது. தேவையற்ற நண்பர்களின் சகவாசமும் பொழுதுபோக்குகளும் உங்களின் வாழக்கை நிலையையே  மாற்றியமைக்கும்.
 
சித்திரை - 3, 4: இந்த மாதம் திறமைகள் வெளிப்படும். எதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடுவீர்கள். நீங்கள்  அனைவராலும் விரும்பப்படுவீர்கள். அதிக சுமைகளை எடுத்துக் கொள்வீர்கள். அதேநேரம் சின்னச் சின்ன பிரச்னைகளில் தலையிட்டு  வெளியில் வர தள்ளாடுவீர்கள்.
 
ஸ்வாதி: இந்த மாதம் ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால் பதிக்க போராடிக்  கொண்டிருந்தவர்கள் எதிர்பார்த்த மாற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களுடன் இருந்த பிரச்னைகள் தீர்வுக்கு வருவதால் அலுவலகச் சூழல்களில்  இருந்த இறுக்கம்  மறைந்து சகஜநிலை உருவாகும்.
 
விசாகம் - 1, 2, 3: இந்த மாதம் அரசுத்துறையிலிருந்து சலுகைகளை பெற குறுக்கு வழிகளை தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக்  கொள்ளுங்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் புகழைத் தக்க வைத்துக் கொள்ள சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும்.
 
பரிகாரம்: கோபூஜை செய்து பசுவை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.
 
அதிர்ஷ்ட தினங்கள்: Oct 20, 21; Nov 16, 17
 
சந்திராஷ்டம தினங்கள்: Oct 27, 28.